பாடசாலை மாணவி தொடர்பில் வெளியான காணொளி: மூவர் கைது
17 வயதுடைய பாடசாலை மாணவி தொடர்பான காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்களும் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 20, 23 மற்றும் 24 வயதுடைய மொனராகலை, பண்டாரவாடிய, பட்டியாலந்த, மகந்தனமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
குறித்த காணொளியை பாடசாலை மாணவியின் காதலன் பெற்று தனது நண்பர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் பின்னர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலைப் பதிவு செய்து, அதை வைத்து மிரட்டி, மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
