தம்பலகாமத்தில் பெண் உட்பட மூவர் கைது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட மூவர் கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
இதன்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன், அங்கிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

33 வயதுடைய பெண்ணிடம் இருந்து 1 கிலோ கிராமும், 29 வயதுடைய இளைஞனிடமிருந்து 10 கிராமும், 33 வயதுடைய இளைஞனிடமிருந்து 10 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri