இலங்கையில் புதிதாக மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி (Video)
இலங்கையில் மேலும் மூவருக்கு கோவிட் வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
ஏற்கனவே ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
The #Omicron , as expected numbers will add up. Get your self boosted. As at today 4 confirmed from our laboratory.
— Chandima Jeewandara (@chandi2012) December 16, 2021