மூன்று மோட்டார்சைக்கிள்கள் மோதி விபத்து: ஸ்தலத்திலேயே ஒருவர் பலி (Photos)
வவுனியா - மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - கணேசபுரம் பகுதியிலிருந்து மரக்காரம்பளை வீதியூடாக பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார்சைக்கிள் வீதியின் எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒழுங்கை ஒன்றிற்குள் திரும்ப முற்பட்டுள்ளது.
இதன்போது எதிர்த்திசையில் வந்த பல்சர் ரக மோட்டார்சைக்கிள், பெண் செலுத்தி வந்த மோட்டார்சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், சாரதியின் கட்டுபாட்டை இழந்து பிறிதொரு மோட்டார்சைக்கிளுடனும் மோதியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளின் சாரதியான பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த சிறிரஞ்சன் (32 வயது) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இரு மோட்டார்சைக்கிளின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
