ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உயிரை பறித்த ரயில் விபத்து! மகன் தொடர்பில் வெளியான தகவல்
பதுளையில் இருந்து கொழும்பு,கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,இவ்வாறு உயிரிழந்தவர்களில் மகன் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திம்புளை – பத்தனை போகாவத்தை பகுதியில் புதிய வீடமைப்பு திட்டத்தில் வசித்து வந்த எஸ்.பிரான்சிஸ் (70) (தந்தை), பி.கமலாவதி (65) (தாய்), பிரான்சிஸ் குமார் ராஜ் (40) (மகன்) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொசெல்ல மற்றும் வட்டவளை ரயில் நிலையங்களுக்கு இடையில் 103 மைல் கல் பகுதியில் முற்பகல் 11.45 அளவில் மூவரும் ரயிலில் மோதுண்டுள்ளனர்.
குறித்த மூவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனரா? என்பது தொடர்பில் வட்டவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் அதே ரயிலில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் கடந்த 10 நாட்களுக்கு முன் தமது வீட்டை மூடிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் இன்று (08) புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக அவர்கள் வாடகைக்கு வசித்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் மகன் மசாலா தூள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும், அவர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மகனை தேடி அவரை திருமணம் முடித்த பெண்கள் என கூறி ஏற்கனவே பல பெண்கள் வீட்டுக்கு வந்துள்ளதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கடனாளிகளிடமிருந்து தப்பிக்க உயிரிழந்த மகன், தந்தை மற்றும் தாயுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் உயிரிழந்த மகனுக்கு எதிராக பிரதேச மக்கள் பண மோசடி தொடர்பில் திம்புளை - பத்தனை பொலிஸில் பல முறைப்பாடுகளையும் செய்துள்ளனர். அதேபோல் கடன் கொடுத்தவர்களில் பலர் உயிரிழந்த மகனை தேடி பல முறை அவர் வசித்த வீட்டுக்கு வந்துள்ளதாகவும் போகாவத்தை மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்...
ஹட்டன் பகுதியில் கோர விபத்து! - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri

ஜேர்மனி செல்லும் கனவில் விமானநிலையம் வந்த நாதஸ்வர கலைஞர்கள்! புரோகிதரால் சுக்குநூறான பரிதாபம்.. எச்சரிக்கை செய்தி News Lankasri

ஒரு படம் கூட இன்னும் வெளிவராத நிலையில், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. Cineulagam
