பிரான்ஸில் தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த அகதிகள்! 3 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். இந்த நகரம் பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்த நகரில் இருந்துதான் பிரான்சின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பியாரிட்ஸ் நகருக்கு வந்த அகதிகள் சிலர் அங்குள்ள புகையிரத தண்டவாளத்தில் உறங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 6 மணிக்கு இந்த தண்டவாளத்தில் புகையிரதம் வந்தபோது தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த அகதிகளை புகையிரத ஓட்டுனர் கவனிக்காததால் அவர்கள் மீது புகையிரதம் ஏறியுள்ளது.
இந்த கோர சம்பவத்தில் அகதிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam