கிண்ணியாவில் காட்டு யானை தாக்கி மூவர் பலி
திருகோணமலை(Trincomalee) - கிண்ணியா பிரதேசத்தில் ஒரு வார காலப்பகுதிக்குள் காட்டு யானை தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியா - பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்று (04) இரவு உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பூவரசந்தீவை சேர்ந்த வெல்லாங்குளத்தில் வசித்து வந்த 61 வயதுடைய முஹைதீன் பிச்சை முகம்மது அனிபா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானைத் தாக்குதல்
இவ்வாறு உயிரிழந்தவர், 5 பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது வீட்டிலிருந்து யானையினை துரத்திச் சென்றபோது இரவு 9.00 மணியளவில் யானைத் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வேளாண்மை காவலில் ஈடுபட்ட ஏனைய மூன்று விவசாயிகளும் யானையின் பிடியிலிருந்து தப்பித்துள்ளனர்.
குறித்த நபரைத் தாக்கிய யானை அங்குள்ள வீடு ஒன்றினையும் சேதப்படுத்திச் சென்றுள்ளதுடன் அங்கு அமைக்கப்பட்டு வந்த கட்டடம் ஒன்றினையும் உடைத்து அதனுள் வைக்கப்பட்டிருந்த நெல்லையும் உட்கொண்டு சென்றுள்ளது.
குறித்த பகுதியில் சிறு போக நெற்பயிர்ச் செய்கை இடம்பெற்று வருவதனால் அங்கு வருகை தரும் யானைகள் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் நுழைந்து அச்சுறுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை
காட்டு யானைகளை தடை செய்வதற்கு மின்சார வேலிகள் இடப்பட்டுள்ள போதிலும் அவற்றை பொருட்படுத்தாது யானைகள் கிராமத்துக்குள் நுழைவதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், யானை தாக்கி உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
