வெளிநாடொன்றுக்கு வழங்கப்படும் வடக்கின் முக்கிய மூன்று தீவுகள்

Sri lanka Northern Province Neduntivu Wijith Wijemuni Zoysa
By Benat Dec 31, 2021 09:55 PM GMT
Report

தற்போது வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் நெடுந்தீவும் உள்ளடங்குகின்றது என முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போத அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது நாட்டில் கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட குதிரைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

குறிப்பாக நெடுந்தீவில் மிகவும் உயரமாகக் காணப்பட்ட குதிரைகள், காலநிலை உள்ளடங்கலாக காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் உயரம் குறைந்தவையாக மாறிவிட்டன.

எனவே வனஜீவராசிகள் சட்டத்தின் ஊடாக அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தன.

அவ்வாறிருக்கையில் அந்தத் தீவை எவ்வாறு பிறிதொரு நாட்டிற்கு வழங்கமுடியும்? எனவே இவ்விடயத்தில் சூழலியலாளர்கள் தலையீடு செய்யவேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனைசெய்து, அதற்குப் பதிலாக மூன்று மாதகாலத்திற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது.

ஆனால் மூன்று மாதங்கள் முடிவடைந்த பின்னர் நாட்டிற்கு எரிபொருளும் கிடைக்காது. நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் குதங்களும் இந்தியாவிற்குச் சொந்தமாகிவிடும்.

இதனால் நாட்டிற்குக் கிடைக்கின்ற பயன் என்ன? மேலும் அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தங்களாலும் பேணிவரும் தொடர்புகளாலும் சந்தேகமடைந்திருக்கும் சீனா, கடந்த 10 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கென சீனத்தூதரகத்தின்கீழ் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. எனவே எதிர்வருங்காலங்களில் சீனா இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US