மட்டக்களப்பில் மூன்று சட்டவிரோத தராசுகள் மீட்பு
மட்டக்களப்பு (Batticaloa) - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் நெற் கொள்வனவிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று சட்டவிரோத தராசுகள் மீட்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்களின் அளவை கருவிகள் தொடர்பாக மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இன்று (28) பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட பதில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பரிசோதகர் தலைமையிலான திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இந்தநடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பரிசோதனை நடவடிக்கை
ஆயித்தியமலை, முன்ளாமுனை, வவுணதீவு, தாண்டியடி, காஞ்சிரங்குடா உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது நிறுவைக்கு பொருத்தமில்லாத மற்றும் அனுமதியற்ற 3 தராசுகள் சட்ட நடவடிக்கையின் பொருட்டு கைப்பற்றப்பட்டு சீல் பண்ணப்பட்டு, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதன்படி வயல் அறுவடை காலம் ஆகையால் இப்பிரதேசத்தில் சிலர் அனுமதியற்ற நிறுவை தராசுகளை பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்நடவடிக்கை மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
