டுபாயிலிருந்து வரும் உத்தரவு: பெரும் குற்றங்களில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது
அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் நேற்று (27) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம், ஹொரொவ்பொத்தானை, நெலுகொல்லாவ பகுதியில் வசிக்கும் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 44 வயதுடைய இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் மற்றும் நெலுகொல்லாவ, மெதவாச்சிய பகுதி மற்றும் அனுராதபுரம், பெரிமியான்குளம் பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 30 வயதுடைய மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் வர்த்தகர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை
மேலும், துப்பாக்கிதாரியாக சந்தேகிக்கப்படும் நபர், டுபாயில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்த போது அவரிடமிருந்து 88 கிராம் 490 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மற்றைய இரண்டு சந்தேகநபர்களிடம் 17 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (28) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |