நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய்: விடுத்துள்ள கோரிக்கை
ஹபரணை - புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இளம் தாய் ஒருவர் கடந்த அன்னையர் தினத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தம்புள்ளை வைத்தியசாலையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
இந்த தாய்க்கு 03 வயதுடைய மற்றுமொரு மகள் இருப்பதாகவும், இதற்கு முன்னர் இரண்டு இரட்டை மகன்கள் பிறந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய கிஹானி சுபேஷலா குமாரி என்ற தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தையான சஞ்சித் அசோக தயானந்தா விசேட தேவையுடையவராவார்.
பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
தம்புள்ளையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய குடிசையில் நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த குழந்தைகளின் எதிர்காலம் கருதி தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




