அனுராதபுரத்தில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட வெடிகுண்டுகள்
அனுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் உள்ள முன்னாள் இராணுவ சிப்பாய் வீட்டில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) கைப்பற்றியுள்ளது.
அனுராதபுரம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய நடவடிக்கை
இதன்போது சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியின் வீட்டிலிருந்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையில் வீதியில் பயணித்த சந்தேகநபர் இந்த குண்டுகளை குற்ற நடவடிக்கைக்கு எடுத்துச்சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 22 மணி நேரம் முன்
நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்... திருமண நாள் கொண்டாட்ட போட்டோ வைரல் Cineulagam