முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரை கெலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது
முல்லைத்தீவு - முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், முள்ளியவளை - முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும் ஒரு குழுவினருக்குமிடையில் கடந்த 13ஆம் திகதி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 14ஆம் திகதி அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைகலப்பு சம்பவம்
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேகநபர்கள் மூவரை நேற்றையதினம் (17.02.2025) இரவு முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் முறிப்பு பகுதியை சேர்ந்த 47,52, 21 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan