யாழில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம்(Jaffna) - கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(28.06.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(29) முற்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam