மன்னாரில் அரிய வகை ஆமையுடன் மூவர் கைது
மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் கைது செய்யப்படுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று (10.02.2024) வங்காலை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கை
இதன்போது அரிய வகை ஆமை கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு வந்த நிலையில் படகில் இருந்த மூன்று கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கடற்படையினர் ஆமையை பிடிக்க பயன் படுத்திய வலைகள், வெளி இணைப்பு இயந்திரம், எஞ்சின் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan