நான்கு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
களனி மற்றும் கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், நான்கு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிரிபத்கொட, களனிய, கடுவலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 262 கேரள கஞ்சாவும், கேரள கஞ்சா விற்பனையில் பெற்றுக்கொள்ளப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தையும் விசேட அதிரடிப் படையினர் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் ரக வாகனத்தில் கேரள கஞ்சாவுடன் பயணித்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்கேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் மற்றும் உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam