இலங்கையில் முதன் முறையாக 4எம்எம்சி போதைப்பொருளுடன் மூவர் கைது
நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட 4எம்எம்சி என்ற போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 115 கிராம் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் மாலைதீவு மற்றும் டுபாயில் இருந்து நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தலின் பின்னணி
மொரட்டுவை, சமன்புர பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடம்பரமான மூன்று மாடி வீடொன்றில் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின் படி, இலங்கையில் இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் விநியோக முகவரான மொரட்டுவ சமன்புர கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 115 கிராம் 4எம்எம்சி போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில், நீண்டகாலமாக நடைபெற்று வந்த 4எம்எம்சி போதைப்பொருள் கடத்தலின் பின்னணி அம்பலமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம் இலங்கைக்கு படகுகள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்யும் தெஹிவளை அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இந்த மோசடியை விநியோகிப்பதற்கு உதவிய தெஹிவளை ஆண்டர்சன் வீதியைச் சேர்ந்த மற்றுமொருவரும் 20 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பொம்மைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டு டுபாயில் இருந்து விமான அஞ்சல் மற்றும் தபால் சேவைகள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மொரட்டுவை, சமன்புரவில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொருட்களை ஒப்படைத்த பின்னர், அவற்றை மீண்டும் பிரித்து பொம்மைகளில் பொதி செய்து மாலைதீவுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்காக தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் உள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் ஒப்படைக்கப்படுவதாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இரவு விடுதிகளுக்கு அடிமையான செல்வந்தர்கள் மத்தியில் இந்த இனந்தெரியாத போதைப்பொருள் பிரபல்யப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளை தெஹிவளை மற்றும் மொரட்டுவ பொலிஸாரிடம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
