யாழ் நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது
யாழ். நகரில் அண்மையில் இரவு வேளையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால், கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடைப் பூட்டியதால் உரிமையாளர் தர மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட தகராறே தாக்குதல் மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட நபர்கள் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்
குறித்த தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri