இந்தியாவிலிருந்து மஞ்சள் மூடைகளை கடத்தி வந்த மூவர் சிக்கினர்
இந்தியாவில் இருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்குள் மஞ்சளைக் கடத்தி வந்த மூவர் புத்தளம் பகுதியில் வைத்து கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் தமிழ்நாடு வேதாளை கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு நாட்டுப்படகில் 44 மூடைகளில் 1,100 கிலோ மஞ்சளை ஏற்றி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் உலகராஜ், நந்தகுமார் அன்னக்கிளி, இலியாஸ் மீரான் அகமது ஆகிய மூன்று இந்திய நபர்களே புத்தளம் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட படகு கற்பிட்டி கடற்படை முகாம் அழைத்துவரப்பட்டு மஞ்சள் மூடைகள் இறக்கப்பட்டன.
அதன்பின்னர் கொரோனா அச்சம் காரணமாக படகும் சந்தேகநபர்கள் மூவரும் மீள இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.








கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
