புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது
திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதையல் தோண்டுதல்
கந்தளாய்-ரஜ எல பகுதியில் வெல்ஹேன்கொட சுசந்த சில்வா என்பவருடைய வீட்டு வளாகத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.
இதனைதொடர்ந்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் மூன்று சந்தேகநபர்களை நேற்று(01.10.2022) மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 45,51 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
ஏற்கனவே குறித்த இடத்தில் கல் ஒன்று இருந்ததாகவும் அந்த இடத்தில் புதையல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த இடத்தை தோண்டியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் கந்தளாய் நீதவான்
முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
