சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது
திருகோணமலை - வரோதயநகர்,துவரங்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சாராயம் உற்பத்தி செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 8 பறள் கோடாவையும் கைப்பற்றியுள்ளதாக திருகோணமலை மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்குக் கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி ஜே.எஸ்.பீ.அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரும் வரோதய நகர்ப் பகுதியைச் சேர்ந்த 25 வயது தொடக்கம் 33 வயதிற்கு உட்பட்ட குடும்பஸ்தர்கள் எனவும் தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் 6000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 7500 மில்லி லீற்றர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மது
வரி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்.



