வட்டுக்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுத்தெற்கு பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று(26.02.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்து மேலும் தெரியவருகையில்,
மரணச் சடங்கு
வட்டுத்தெற்கு பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.
மரணச் சடங்கு நடந்த இடத்தில் இருந்த சில இளைஞர்களிடையே முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாக சைதன்யாவின் தண்டேல் படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
