ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி ஐஸ் கடத்திய மூவர் கைது- மோட்டார் சைக்கிளும் மீட்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி ஐஸ் போதைப் பொருளைக் கடத்திய மூவர் ஏறாவூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று(09) மாலை இடம்பெற்ற இக்கைதில் கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின்போது 16000 மில்லி கிராம் கேரளா கஞ்சா, 400 மில்லி கிராம் ஐஸ் ஆகியவற்றுடன் மூவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான நபர்களும் போதைப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.



அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam