திருகோணமலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் கைது
திருகோணமலை - கன்னியா, பீலியடி பள்ளம் குளத்துக்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களை இன்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் குழுவொன்று கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக திருகோணமலை குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 90 போத்தல்கள் சாராயம், 11 கோடா பெரல், கம்பி போன்ற பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
