தற்செயலாக எடுக்கப்பட்ட படம்: வசமாக சிக்கிய சிறுவர்கள்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் தொடருந்து மீது தொடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மூன்று பேர் யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய யாழ். பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்தேவி நேற்றுமுன்தினம் யாழ். நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூவர் கைது
தொடருந்து வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை பயணியொருவர் தற்செயலாக படம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் 15 - 13 வயதுகளுக்கு உட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
