மட்டக்களப்பில் பெருமளவு மதுபான போத்தல்களுடன் மூவர் கைது
எதிர்வரும் 21ம் திகதி அமுலாகும் பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மதுபானசாலைகள் மூடப்படும் நிலையில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கென மூன்று வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு மதுபான போத்தல்களை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக அப்பரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணியளவில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ். டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மாமாங்கம், கூழாவடி, ஊறணி ஆகிய இடங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
307 போத்தல் 180 மில்லி லீற்றர் கொள்ளவுள்ள போத்தல்களும், 750 மில்லிலீற்றர் கொள்ளளவுள்ள 8 போத்தல்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.