திருகோணமலை வைத்தியசாலையில் வெட்டுக்காயங்களுடன் மூவர் அனுமதி
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மூவர் வெட்டுக்காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வெட்டுக் காயங்களுக்கு உள்ளானவர்கள் திருகோணமலை கப்பல்துறை ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெர்ணாந்து குமார் (47வயது) அவரது மனைவி முத்துமாரி (43வயது) மற்றும் ஆறு மாதக் குழந்தையான தக்சன் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குடும்ப தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வாளால்
வெட்டிய போது மாமியார் தடுக்க சென்றதாகவும், இதேவேளை மாமனாரின் கையிலிருந்த
குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம்
தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam