வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற போது பலி
பக்கமூன – கிரிதலே பிரதான வீதியின் தியபெதும நகரத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, வீதியோரத்திலிருந்த வேப்ப மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கோர விபத்து
இந்த விபத்தின் போது வேனின் முன் ஆசனத்தில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

அத்துதுடன், காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவர் வெளிநாட்டில் இருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பிய நிலையில் தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
ஓட்டுநரின் அதிவேகம் மற்றும் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan