குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி: வைத்தியர்கள் சிகிச்சையளிக்காததால் நோயாளர்கள் அவதி
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்டநேரமாக சிகிச்சை வழங்கப்படாத சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை
இன்று (25.08.2025) காலை 6.30 மணியளவில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர்கள் இருவருக்கும், அவ் வீதியால் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் அப்பகுதியில் இருந்த குளவிகூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் கொட்டியுள்ளது.

உடனடியாக உறவினர்களால் மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் இருப்பதாக கூறி நீண்டநேரம் பார்வையிடவில்லையென நோயாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு
அத்தோடு இன்னும் பல நோயாளர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே சிகிச்சை பெற்றுள்ளமையை அவதானிக்ககூடியதாக இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் வைத்தியர்கள் அல்லது தாதியர்கள் பணிபகிஸ்கரிப்பாக இருப்பினும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளர்களையாவது உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும் என நோயாளர்கள் இதன்போது தெரிவித்திருந்தனர்.




எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam