என்னைத் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப் போவதாக மிரட்டல் – தம்மரதன தேரர் பகீர் தகவல்
தற்போது சில தரப்பினர் மதம் மற்றும் ஆன்மீகத்தை இழிவுபடுத்தி, சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபட்டு வருவதாக மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
தன்னைக் காவி உடையைக் கழற்றி வந்து தாக்குமாறும், வைத்தியசாலையில் அனுமதிக்கச் செய்வதாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணுக்குப் புலப்படாத சக்தி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 81ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆசி வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக சில பொதுமக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் தனது பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரித்ததாகவும், விகாராதிபதி பதவியிலிருந்து நீக்கி தாக்குதல் நடத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கச் செய்வதாக வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வரலாற்றுச் சிறப்புமிக்க தூபிகளின் ஆசீர்வாதமும் கண்ணுக்குப் புலப்படாத சக்திகளும் தர்மத்தின் வழியில் செயற்படும் பிக்குகளைப் பாதுகாப்பதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் தம்மரதன தேரர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வெடிக்கும் தொழிற்சங்கப் போராட்டம்! நாளை முடங்கப்போகும் அரச சேவைகள்