தெற்கு லெபனானில் ஐ.நா அமைதிப்படையினருக்கு அச்சுறுத்தல்
தெற்கு லெபனானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் அங்கு ஐநா அமைதிப்படையினர் எதிர்கொண்டு வரும் அறிக்கையின் படியான சவால்கள் குறித்து லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவூன் ஐநா உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் அவூன், ஐநா அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் தியோடாடோ அபக்னாரா மற்றும் ஐநாவின் துணை சிறப்பு ஒருங்கிணைப்பாளர் இம்ரான் ரிசா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில், தெற்கு லெபனானில் ஐநா அமைதிப்படையினரின் நடமாட்டத்திற்கு எதிராக ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டைகள், அவர்கள் எதிர்கொள்ளும் "சிரமங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்" மற்றும் அமைதிப்படையின் தற்போதைய அதிகாரப்பூர்வ ஆணை காலம் முடிவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
போர் நடவடிக்கை
லெபனானில் அமைதியை நிலைநாட்டுவதற்காகத் தங்களின் உயிரைத் தியாகம் செய்த ஐ.நா அமைதிப்படை வீரர்களுக்கு ஜனாதிபதி ஜோசப் அவூன் தனது ஆழந்த இரங்கலை மீண்டும் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், ஆபத்தானச் சூழலிலும் அவர்கள் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டிய அவர், அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பிராந்தியத்தில் போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள போதிலும், தெற்கு லெபனானில் இன்னும் பதற்றமான சூழலே நீடித்து வருவதால், ஐநா அமைதிப்படையின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam