ட்ரம்பின் மகனுக்கு ஈரானால் ஏற்பட்டுள்ள ஆபத்து.. அதிரடியாக களமிறங்கிய இரகசிய புலனாய்வாளர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன் ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் காணொளி ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இரகசிய புலனாய்வு துறை தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
படுகொலை திட்டம்..
குறித்த காணொளியில் பரோன் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரைக் கொல்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுக்கு விடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த இரகசிய புலனாய்வு துறையின் பேச்சாளர் நெய்ட் ஹெரிங், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் ஆறு மாதங்களாகத் தொடரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.