மர்மமான முறையில் உயிரிழந்த மயக்கவியல் வைத்திய நிபுணர்! பிரேதப்பரிசோதனையில் வெளியான தகவல்
காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் கண்டறிய மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு நீதித்துறை வைத்தியஅதிகாரி ஜே.எஸ்.டி. பீரிஸ் பிரேதப் பரிசோதனையை நடத்தியதாகவும், பின்னர் மரணம் குறித்து திறந்த தீர்ப்பை வழங்கி, மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு
சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து மஹியங்கனை வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி மூலம் இறந்தவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தி, வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரது மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மயானத்தில் நல்லடக்கம்
கினிகத்தேனை பகுதியை சேர்ந்த மயக்கவியல் நிபுணர், மாத்தளையில் வசித்து வந்துள்ளதுடன், பணியில் இருந்த போது , தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வைத்தியருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் வைத்தியர் என்றும், மற்றொருவர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மயக்கவியல் நிபுணரின் உடல் நேற்று (25) பதுளை தனியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.