நாமல் - ரணில் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் வழக்குகளை விசாரிக்கும் நீதவானுக்கு மிரட்டல்
கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பசன் அமரசேனவுக்கு கிடைத்துள்ள கடிதம் ஒன்றினால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், நீதவான் பசன் அமரசேனவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளும் புலனாய்வாளர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதவான், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணையின் முதற்கட்டமாக, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது விசாரணையில் உள்ள பல முக்கியமான வழக்குகள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri