பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதிக்கோரி அவுஸ்திரேலியாவில் அணி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
அவுஸ்திரேலியாவின் அரச நிறுவனங்கள் சிலவற்றில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை,பாலியல் துஷ்பிரயோகம், பாகுபாடு மற்றும் தவறான நடத்தை என்பனவற்றிற்கு நீதிக்கோரி ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் March4Justice பேரணி இடம்பெற்றுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) மெல்பேர்னில் ஆர்ப்பாட்டக்காரர்கள் 2008 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த பெண்களின் பெயர்களைக் கொண்ட ஒரு மீட்டர் நீளமுள்ள வெள்ளை பதாதையை ஏந்தியவாறு ஊர்வலமாக நகர்ந்துள்ளனர்.
இதன்போது பெண்கள் கருப்பு நிற ஆடையை அணிந்துக்கொண்டு ‘நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்’ என்றும் கோஷமிட்டுள்ளனர்.
குறித்த பேரணியில் பல அரசியல்வாதிகள் கலந்துக்கொண்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்,பிரதமர் ஸ்கொட் மோரிஸன் மற்றும் பெண்களுக்கான அமைச்சர் மெரிஸ் பயன் ஆகியோர் பேரணியில் கலந்துக்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் பேரணியில் கலந்துக்கொண்ட முக்கிய நபர்கள் நால்வரை தனியே சந்திக்க பிரதமர் அழைப்பு விடுத்திருந்த போதும் பேரணி ஏற்பாட்டாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ளவர்கள் மாற்றத்தைக் கோரி இரண்டு மனுக்களை வழங்கவும் தயாராக இருந்தனர்.
இதேவேளை, மூத்த அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸின் அலுவலகத்திற்குள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முன்னாள் அரசியல் ஆலோசகரான பிரிட்டானி ஹிக்கின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்தின் பதில் போதுமானதாக இல்லை என்றும் தாம் கருதுவதாக கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
