போதைப்பொருள் கும்பல்களை நிலைகுலையச் செய்த பொலிஸார் - ஒரே நாளில் 1286 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1,286 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 1,290 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 2 பேர் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கைப்பற்றல்
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 428 கிராம் ஹெரோயின், 702 கிராம் ஐஸ், 5 கிராம் 785 மில்லிகிராம் கொக்கெய்ன், ஒரு கிலோகிராம் 450 கிராம் கஞ்சா, 2,129 கஞ்சா செடிகள், ஒரு கிராம் குஷ் ரக போதைப்பொருள், 400 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 278 போதை மாத்திரைகள், 849 கிராம் 440 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 600 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam