இலங்கைக்கு கடத்தவிருந்த 1000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் : தமிழகத்தில் சிக்கியது
மியன்மாரில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நேற்று மாலை தமிழகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டது.
56 கிலோகிராம் எடை கொண்ட போதைப்பொருள்
56 கிலோகிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், மியன்மாரில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்கு கடத்தி வரப்பட்டு அங்கிருந்து சென்னையின் ஊடாக இலங்கைக்குக் கடத்த முற்பட்ட வேளையிலே கைப்பற்றப்பட்டுள்ளது.
மெத்தம்பெட்டமைன் ரகத்தைச் சேர்ந்த இந்தப் போதைப்பொருளின் பெறுமதி இலங்கை ரூபாவில் ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இருவர் கைது
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் இந்தியாவின் பிரபல கடத்தல்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மத்திய அரசின் கீழ் உள்ள சுங்கத் திணைக்களத்தின் கீழேயுள்ள டி.ஆர்.ஐயினர் போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri