பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பண்டிகை காலங்களில் விருந்துகளுக்கு செல்பவர்கள் சாரதியை அழைத்துச் செல்லுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு சாரதி இல்லாத பட்சத்தில் வாடகை வாகனத்தில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள் அதிகரிப்பு
இந்த வருடத்தில் 21312 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துகளில் 2163 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5296 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இம்மாதம் கடந்த 4 நாட்களில் 2427 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 232 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
