கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்துள்ள ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இன்னும் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க மொத்தம் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இதுபோன்ற சிக்கியுள்ள அத்தியாவசியப் பொருட்களின் கொள்கலன்களை வெளியிடுவதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவித்துள்ளது.
எஞ்சிய தொகையானது எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மத்திய வங்கியினால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan