தலைவர் அஷ்ரப்பின் சிந்தனைகளை புதைகுழியில் அமிழ்த்தக் கூடாது : அசாத் சாலி

Ampara Srilanka Muslim Congress Azath Saali Eastern Province
By Independent Writer May 27, 2024 08:42 PM GMT
Report

 அரசியல் பிழைப்புக்காக பெருந்தலைவர் அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி.கைவிட வேண்டுமென, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஹரீஸ் எம்.பி. எடுக்கும் முயற்சிகள் குறித்து அதிருப்தி தெரிவித்தே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு

தேர்தல் காலம்

அந்த அறிக்கையில் அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளதாவது: “ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரபின் ஆளுமைகள் காலத்தால் அழியாதவை. அவரது சிந்தனைகள் முஸ்லிம் சமூகத்தின் விலைமதிக்க முடியாத சொத்தாக மதிக்கப்படுகின்றன.

அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர், அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் எவரும் அவரது அடியொட்டி அரசியல் செய்யவில்லை. இதனால், புதைகுழியில் மூழ்கும் நிலைக்கு சமூக அரசியல் சென்றுள்ளது.

தலைவர் அஷ்ரப்பின் சிந்தனைகளை புதைகுழியில் அமிழ்த்தக் கூடாது : அசாத் சாலி | Thoughts Of Leader Not Be Buried In The Grave

இவ்வாறு இறுதி மூச்சைவிடும் அரசியல்வாதிகளில் ஒருவராகவே ஹரீஸ் உள்ளார். இது தேர்தல் காலம் என்பதால், தலைவர் அஷ்ரபின் பெயரை ஞாபகமூட்டி, இழந்த பெயரை உயர்த்தும் முயற்சியில் ஹரீஸ் இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.

கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் நிதி கோரி உள்ளமை இதனையே புலப்படுத்துகிறது. ரணிலுக்கு தலையைக் காட்டி, சஜிதுக்கு முதுகைக் காட்டி மற்றும் ஹக்கீமுக்கு ஊரைக்காட்டி அரசியல் செய்யும் இவரால் எதைச் சாதிக்க முடிந்தது? தலைமைக்கு விசுவாசம் இல்லாத ஹரீஸ் சமூகத்தை நேசிப்பார் அல்லது சொந்த ஊரை வாழ வைப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள்

முஸ்லிம் சமூக எழுச்சி

இவரது எண்ணமெல்லாம் அஷ்ரபின் பெயரை விற்று எம்.பியாவது மாத்திரமே. இந்த 24 வருட இடைவெளியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரபுக்காக எதைச் செய்தது? அதிகாரத்தில் இருந்த காலங்களிலாவது பெருந்தலைவரின் மரணம் குறித்து உறுதியான முடிவைப் பெற முடிந்ததா? ஆகக் குறைந்தது தலைவரதும் அவரதும் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முகத்தோற்றமுமாக உள்ள ஊரான கல்முனைக்காவது இவரால் எதையும் செய்ய இயலவில்லை.

ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது ஊர்களையாவது அபிவிருத்தி செய்து உருப்படவைத்துள்ளனர். கல்முனையில் ஒரு சந்தைக்கட்டடம் இல்லை. மாநகர சபைக்கு முறையான அமைவிடம் இல்லை.

தலைவர் அஷ்ரப்பின் சிந்தனைகளை புதைகுழியில் அமிழ்த்தக் கூடாது : அசாத் சாலி | Thoughts Of Leader Not Be Buried In The Grave

உடைந்துகிடக்கும் வாசிகசாலையை கட்டவில்லை. சாய்ந்தமருது மக்களை இணைத்துச் செல்லும் திட்டம் துளியளவும் இல்லை. இந்த இயலாமைகளை மறைப்பதற்கே, கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைக்க முயல்கிறார். தலைவரின் குடும்பத்தினர்கூட இதை விரும்பவில்லை.

அமான் அஷ்ரப் அவரது டுவிட்டரில் இதை வன்மையாக எதிர்த்துள்ளார். விவசாய ஆய்வுகூடம், மீன்களைப் பதனிடும் தொழிற்சாலை அல்லது ஒலுவில் துறைமுகப் பிரச்சினை இதுபோன்று உருப்படியாகச் சிந்திக்காமல், அஷ்ரபின் பெயரை சில்லறை வியாபாரமாக மாற்றுவதற்கு ஹரீஸுக்கு எந்த அருகதையும் கிடையாது.

முஸ்லிம் சமூக எழுச்சி குறித்து சிந்தித்த தலைவர் அஷ்ரபை, அருங்காட்சியகத்துக்குள் அடைத்துவைக்க முடியாது” என்றும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி மரணத்தில் வெளிவரா திகில் நிமிடங்கள்

ஈரான் ஜனாதிபதி மரணத்தில் வெளிவரா திகில் நிமிடங்கள்

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US