நீரில் மூழ்கி உயிரிழந்தவரை காப்பாற்ற சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை!
ஆனமடுவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒருவரை காப்பாற்ற முற்பட்ட பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் குளிக்க சென்ற நிலையில், நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில், அந்த நபர் நீரில் மூழ்குவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் உயிரிழந்த நபருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், குறித்த நபரை தண்ணீரிலிருந்து மீட்பதில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரை வைத்தியசாலையில் சேர்க்க தலையிட்டவர்கள் ஆகியோரை உடனடியாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
