தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்தவர்களுக்கு விளக்கமறியல் (Video)
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா செல்ல முயற்சி

திருகோணமலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள், பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை(27.09.2022) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்றுள்ளனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரும்
தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு
ஆண்கள் மற்றும் பெண்ணை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (06-10-2022)
விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் 18 வயதுக்கு குறைந்த ஏனைய மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு
அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.


இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri