கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு நேர்ந்த கதி
கனேடிய (Canada)மாகாணமொன்றில் கடந்த 8 ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் ஒன்ராறியோ(Ontario) மாகாண, ஆப்டோமெட்ரிஸ்ட் (Optometrists) என்னும் கண் மருத்துவ துறை சார் அலுவலர்கள் அமைப்பு, (Association of Optometrists, OAO), சூரிய கிரகணம் நிகழ்ந்த திகதிக்குப் பின்னர் கண் பிரச்சினையுடன் 118 பேர் மருத்துவமனைகளுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கண் பாதிப்பு
குறித்த நோயாளர்கள், விழித்திரை வீக்கம் (Inflammation of the cornea), உலர் கண்கள் சோலார் ரெட்டினோபதி (solar retinopathy) ஆகிய கண் பாதிப்பு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவற்றில், இந்த சோலார் ரெட்டினோபதி (solar retinopathy) என்பதை சூரியன் அல்லது சூரிய கிரகணத்தைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு என்றே மருத்துவ அறிவியல் குறிப்பிடுகின்றது.
இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தென்பட்டுள்ளது.
எனினும், சோலார் ரெட்டினோபதி (solar retinopathy) என்னும் பாதிப்பானது, பாதிப்புக்குள்ளானவர்கள் எவ்வளவு நேரம் சூரியனைப் பார்த்தார்கள் மற்றும் அவர்களுடைய விழித்திரையின் எந்த பாகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
