வேறு நாடுகளில் குடியேறும் எண்ணமே இல்லை! மைத்திரி திட்டவட்டம்
இலங்கையில் இருந்து வேறு நாடொன்றுக்கு குடிபெயரும் எண்ணம் ஒருபோதும் தமக்கு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உறுதிபடத் தெரிவித்துள்ளார் .
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தென் கொரியாவில்(South Korea)குடியேறப் போவதாக சமீப நாட்களாக அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கின்றது.
வெளியிட்டுள்ள அறிக்கை
அது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மைத்திரிபால சிறிசேன, குறித்த விடயத்தை முற்றாக மறுத்துள்ளார். தென் கொரியா மட்டுமன்றி எந்தவொரு நாட்டுக்கும் தான் குடியேறப் போவதில்லை என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.
அத்துடன் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கட்சித் தலைமைப் பதவியில் தான் செயற்பட முடியாத காரணத்தினால் கம்பஹாவில்(Gampaha) நடைபெறும் கட்சியின் மே தின பேரணியில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
