எஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை பெற்றவர்கள் சினோர்பார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டாம்!
எஸ்ட்ரா செனேகா தடுப்பூசிகளின் முதல் குப்பிகளைப் பெற்றவர்கள் சீனாவின் தயாரிப்பான சினோர்பார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சேவையின் உதவி பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.எம். ஆர்னால்ட் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே எஸ்ரா செனேகா தடுப்பூசியைப் பெற்றவர்கள் சீன தடுப்பூசியை இரண்டாவது அளவாக முயற்சித்த சம்பவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளன.
எஸ்ட்ரா செனேகா முதல் அளவாகப் பெற்ற ஒருவர் இரண்டாவது அளவாகவும் அதைப் பெறுவது அவசியம். இது மாறுபடும் போது சுகாதார உடல்நல கேடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஆர்னல்ட் தெரிவித்தார்.
இதற்கிடையில்
கோவிட் தடுப்பூசி வகைகளின் கலவைகளுக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல்
வழங்கவில்லை என்றும் சுகாதார அமைச்சு உதவி பணிப்பாளர் ஆர்னல்ட்
சுட்டிக்காட்டினார்.