விடுதலை புலிகளால் துரோகிகளென குறி வைக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பில்! மனோ பகிரங்க குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
யாழில் பிரபா கணேசனுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் தனது முகப்புத்தக பதிவில் விளக்கம் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மகிந்த அரசுடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. அதில் விடுதலை புலிகளால் “துரோகிகள்” என்று குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியினரும் உள்ளார்கள்.
ஆயுதப்போர் என்பது அழிவுப்போர் என்று சொல்பவர்களும் உள்ளார்கள். இவையெல்லாம் ஒன்று சேர்ந்தது காலத்தின் கட்டாயங்கள். “எது சரி, எது பிழை” என இன்று நாம் தீர்ப்பு சொல்ல முடியாது.வரலாறு தான் தீர்ப்பு வழங்கும்.
அதுபோல், ஜனநாயக மக்கள் முன்னணிக்குள், தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் புதுவரவு, புதுபித்தல் வரவு மாற்றங்கள் வருமாயின், காலத்தின் கட்டாயங்கள் ஏற்படுமாயின், நான் பகிரங்கமாக சொல்வேன்.
எனது பாதை கரடுமுரணானது. ஆனால், நேரானது. 2005 முதல் 2020 வரை என் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சிகள் உட்பட, உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் ஏற்பட்ட எல்லா சவால்களையும் வெற்றிக்கரமாக எதிர்கொண்டு, இன்று தென்னிலங்கையில், தேசிய மட்டத்தில், தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வீச்சு பெற்று, வளர்ச்சியடைந்த ஒரு கூட்டணியின், தலைமை பொறுப்பில் நான் இருக்கிறேன்.
ஆகவே சும்மா, எடுத்தேன், கவிழ்த்தேன், என்று நான் முடிவுகளை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
