தாயகத் திரை அரங்குகளில் வெற்றி நடை போடும் தூவானம் திரைப்படம் (video)
யாழ்.போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணரின் முழு நீளபடமான “தூவானம்" தாயகத் திரை அரங்குகளில் வெற்றி நடை போடுகின்றது.
இத் திரைப்படம், எமது வாழ்வியலையும் கலை கலாசாரத்தையும் தனித்துவத்தையும் உணர்வுபூர்வமாகச் சித்தரித்து நிற்பதால் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்று வருகின்றது.
முழுக்க முழுக்க ஈழுத்துக் கலைஞர்களால் உருவான இத் திரைக்காவியம் உலகம் முழுவதும் வாழும் எமது புலம்பெயர் மக்களுக்காகத் திரையிடப்பட இருக்கின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் வைத்தியர்களின் அமைப்பான JMFOA (JAFFNA MEDICAL FACULTY OVERSEAS AUMNI) அனுசரணையுடன் திரையிடப்படவுள்ளது.
இத் திரைப்படமானது புலம்பெயர் சமூகம் எவ்வாறு எமது ஈழத்து மக்களின் நிரந்தரமான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவலாம் என்ற கருத்தைத் தாங்கி வருகின்றது.
இதுபோன்ற ஈழத்துப் படைப்புகளை ஊக்குவிக்கவும் அவர்களின் தேவையை அறிந்துகொள்ளவும் புலம்பெயர் சமூகத்தின் ஆதரவை வேண்டி நிற்பதாக படக்குழு தெரிவித்துள்ளது..
1.JUNE 03, 2023 The Park, 46 Cowan Street 7 pm Angel Park, SA 5010, Australia.
2.JUNE 04, 2023 - Alperton Community School, 4pm. Ealing Road, London.
3.JUNE 10, 2023 - woodside Cinema, Scarborough Canada.
4.JUNE 17,2023 - Kim E. Beazley Lecture Theatre Murdoch University, Western Australia.
Thoovaanam Trailer





மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
