தையிட்டியில் புதிய திருப்பம்! தனியார் காணிகளை விடுவிக்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசேட அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.
2019 ஆம் ஆண்டு தனியார் காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்த விகாரை விவகாரம் நீண்டகாலமாக இன முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.
இதனைத் தீர்ப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அண்மையில் காணி அளவீட்டுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் காணி உரிமையாளர்கள் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளபோதும், தற்போதைய காணி அளவீடுகள் மூலம் இவை தனியார் காணிகள் என்பது ஆவண ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டும் .
இதன் மூலம் அடுத்தகட்டமாகச் சட்ட நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்பது எளிதாகும் எனச் சுகிர்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் இலாபத்திற்காகச் சிலர் போராட்டங்களை முன்னெடுத்தாலும், சாதுரியமான நகர்வுகள் மூலம் மக்களின் நிலங்களை மீட்டெடுப்பதே தமது இலக்கு என அவர் மேலும் குறிப்பிட்டார்