முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்(Photos)
தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்கள் தாயகம் எங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றையதினம் 21.09.2023 மாலை 5:30 மணியளவில் முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் விசுவமடு வர்த்தக சங்கத்தலைவர் பொதுச்சுடரை ஏற்றிவைத்த்துள்ளார்.
தியாக தீபத்தின் நினைவேந்தல்
அதனை தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் பொதுமக்களினால் மலர் வணக்கம் செய்தும் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் முகமாக அஞ்சலி உறையும், நினைவு சுமந்த கவிதையும் இதன்போது முன்வைக்கப்பட்டிருந்தது.