தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பம்
தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது.
இன்று காலை 9 மணியளவில் யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் ஆரம்பமாகும்.
உண்ணாவிரத போராட்டம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முன்வைத்து உணவையும் நீரையும் தவிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார். யாழ்ப்பாணம், ஊரெழுவைச் சேர்ந்த திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன் என்பதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




